ஆண்களைப்பற்றி ஒரு இல்லத்தரசியின் பார்வை

கதாவனி

17ஆண்டுகள் இல்லறவாழ்வில் ஈடுபட்ட ஒரு பெண் ஆண்களைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்

நிச்சயமாக ஆண் ஒரு அருமையான படைப்பு ஆண்டவன் அவனைப் படைத்தான் அவனை அழகாக வடிவமைத்தான். ஆண் தன் கரங்களின் முன் இருக்கும் அனைத்தையும்...

தனது சகோதரிக்காக,
தனது மகளுக்காக,
தனது மனைவிக்காக,
தனது அன்னைக்காக,
தனது தந்தைக்காக, தனது பேரன், பேத்திகளுக்காகத் தியாகம் செய்கிறான்.

அவன் தனது இளமையை, ஆரோக்கியத்தை மனைவிக்காகவும், பிள்ளைக்காகவும் எவ்வித முணுமுணுப்புமின்றி தொடர்ச்சியாகத் தியாகம் செய்கிறான்.

தனது குடும்ப அமைப்பக் கட்டமைக்க, தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முயறலுகிறான். அதற்காகத் தனது உடல் நலத்தையும் கருதாமல் ஒன்றுக்கு மேல் பல பணிகளில் ஈடுபடுகிறான். இதற்காக இடைவிடாது போராடுகிறான்.

இவ்வளவு தியாகம் செய்த பின்னும் அவன் தந்தையின், தாயின் பழி சொல்லிற்கும், அவனுடைய பணியில் மேலாளரின் ஏச்சிற்கும் ஆளாகிறான். இதற்கும் மேலாக எப்பொழுதும் ஏதெனும் இழி சொல் அவன் தலையில் விழுந்து கொண்டே இருக்கிறது.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நாட்கள் சுற்றுலா சென்றால் வெட்டித்தனமாக செலவு செய்கிறான் என்பார்கள். வீட்டிலேயே இருந்தால் சோம்பேறி பொம்பளை மாதிரி வீட்டிலேயே இருக்கிறான் என்பார்கள். தவறு செய்யும் பிள்ளைகளிடம் கொஞ்சம் கடுமை காட்டினால் சிடுமூஞ்சி

அவர்களிடம் கொஞ்சம் மென்மையாக நடந்தால் பிள்ளைகளைக் கெடுக்கிறான். தனது மனைவியை பணிக்குப் போகாமல் தடுத்தால் அடிமை போல் நடத்துகிறான். பணிக்குச் செல்ல அனுமதித்தால் மனைவியின் உழைப்பைச் சுரண்டுகிறான். தாயின் பேச்சைக் கேட்டால் அம்மாபிள்ளை. மனைவியின் பேச்சைக் கேட்டால் பெண்டாட்டி தாசன்.

இவ்வளவு இருந்தும் உலகில் தந்தை ஒருவன்தான் தனது மகன் அனைத்து விடயங்களிலும் தன்னை விட மேலோங்க வேண்டும் என நினைப்பவன். தந்தைதான் தனது பிள்ளைகளை நேசிப்பவனாக, அவர்களுக்காக அனுதினமும் நலன் பெற பிரார்த்திப்பவனாக இருப்பவன், அவன் வாழ்வில் எவ்வளவு வேதனைகளையும், ஏமாற்றங்களை சந்தித்த போதும் அவனது பிள்ளை குழந்தையாகத் தவழும் போது கைகளில் ஏந்துகிறான், நடக்க ஆரம்பிக்கும் போது தோள்களில் சுமக்கிறான், பெரியவர்களாக மாறும் போது தனது இதயத்தில் சுமக்கிறான்.

தாய் தன் பிள்ளையை 9 மாதங்கள் கருவில் சுமக்கிறாள். ஆனால் தந்தை பிள்ளைகளைத் தனது சிந்தனையில் அவன் வாழும் காலமெல்லாம் சுமந்து கொண்டே இருக்கிறான். ஒரு குடும்பத்தின் தலைவன் சிறந்தவனாக வாழும் வரை இவ்வுலகம் சிறக்கும்.

இவ் வார்த்தைகள் ஒரு இல்லத்தரசியின் உள்ளத்திலிருந்து வந்தவை. பிள்ளைகளே, பெண்களே ஒவ்வொரு ஆணையும், தந்தையையும் கண்ணியப்படுத்துங்கள் உங்களுக்காக எவ்வளவு தியாகத் தழும்புகள் அவர்களின் உள்ளங்களில் பதிந்துள்ளன என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்...

அரபியிலிருந்து தமிழில்

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES